Monday, September 30, 2013

வாங்க... வாங்க... நீங்க ரொம்ம்ம்ப்ப நல்லவர்! நான் தலைப்புலயே எச்சரிச்சும்கூட என்னைய நம்பிப் படிக்கலாம்னு உள்ள வந்துட்டீங்க. இப்படித்தாங்க... "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க"ன்னு ஒருத்தர் சொன்னப்பக் கூட அவரோட பேச்சைக் கேக்காம நம்ம ஜனங்க அந்தப் புத்தகத்தை வாங்கித் தள்ளிட்டாங்க. யார் எது சொன்னாலும் அதுக்கு நேர்மாறாச் செய்யறது சின்னப் புள்ளையில இருந்தே நமக்கெல்லாம் பழக்கம்தானுங்களே... நல்லது சொன்னா ஜனங்க எங்கங்க கேக்கறாங்க...? இப்பகூட நான் உங்களோட கழுத்துல இருந்துல்லாம் ரத்தம் வந்துரக் கூடாதேங்கற நல்லெண்ணத்துலதான் இந்தத் தலைப்பை வெச்சேங்க... அதைத் தாண்டி அப்படி ஒண்ணு நடக்கணும்னு இருந்துச்சுன்னா... எல்லாம் விதிங்க! சரி, இப்ப உங்ககிட்ட சில கேள்விகள் கேக்கப் போறேன். அதுக்கு உடனே விடை கண்டுபிடிச்சவங்க, உங்களோட ரெண்டு கையையும் முதுகுக்குப் பின்னால கொண்டு போயி தட்டிக் கொடுத்துக்கங்க. முடியாதவங்களுக்கு... பதிவோட கடைசியில வடை கிடைக்கும்... ஸாரி, விடை கிடைக்கும்!

======================================

1. நஸ்ரியான்னா உருகற ஆளாச்சே நம்ம கோவை ஆவி, 'ராஜாராணி' எப்படியிருக்குன்னு அவரக் கேட்டாத் தெரியுமேன்னுட்டு போன் செய்தபோது தொடர்ந்து ரிங் போச்சு... ஆனா எடுக்கலை. சரி... பயபுள்ள ஏதோ தியேட்டர்ல இருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு கட் பண்ணிட்டேன். அது மிகச்சரி! ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணின ஆவி, தான் தியேட்டர்ல 'ராஜாராணி' படம் பாத்துட்டிருந்ததாச் சொன்னார். அப்ப நான் ஆவி, தி பாஸ் கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். அந்தக் கேள்வியைக் காதுல வாங்கினதும், என் பக்கத்து சீட்ல வொர்க் பண்ணிட்டிருந்தவர் தலைசுத்தி சீட்லயே மயங்கி விழுந்துட்டாருங்க! அப்படி நான் என்ன கேள்வியைக் கேட்டிருப்பேன்?

======================================

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தபோது பாகிஸ்தான் உபதளபதி ஒருவர் புதிய பைலட்டுக்கு போர் விமானத்தை இயக்கும் விதத்தை விளக்கிக் கொண்டிருந்தார். "இந்த பட்டனை அழுத்தினால் விமானம் மேலேறும், இதை அழுத்தினால் வலதுபுறம் திரும்பும், இதை அழுத்தினால் இடதுபுறம் திரும்பும்" என்றார். விமானி கேட்டார் "சரி ஐயா... விமானத்தைக் கீழே இறக்க என்ன செய்ய வேண்டும்?" உபதளபதியின் பதில்: "அதைப் பற்றிக் கவலைப்படாதே. அதை இந்தியர்கள் கவனித்துக் கொள்வார்கள்." (1980 தினமணி கதிரிலிருந்து)

======================================

2. சென்னையின் பிரம்மாண்ட நூலகத்திற்குப் போயிருந்தப்ப அந்த ஆங்கில நாளிதழ் என் கண்ணுல பட்டது. நமக்கு ஆங்கிலப் பேப்பர்லாம் படிக்கிற அளவுக்கு 'வெவரம்' பத்தாதுன்னாலும் ஒரு 'பந்தா'வுக்காக அப்பப்ப புரட்டறதுண்டு. அப்படி அந்த பேப்பரைக் கையிலெடுத்து புரட்டினப்ப சென்ட்டர்ல வர்ற டபுள் ஸ்ப்ரெட் பேஜ்ல இடதுபக்க ஓரத்துல ஒரு ஆப்பிரிக்க யானையோட கலர்ப் படத்தைப் போட்டு, ஒரு column அளவுல அதைப் பத்தி மேட்டர் போட்டிருந்தாங்க... அதே பேஜோட வலது பக்க ஓரத்துல ஒரு சயாமியப் பூனையோட கலர்ப் படத்தைப் போட்டு, அதைப் பத்தியும் ஒரு column அளவுல மேட்டர் போட்டிருந்தாங்க. இதைக் கவனிச்சதும் என்னோட மூளையில (நிசமா இருக்குங்க!) ஒரு ஸ்பார்க் ஆச்சு! உடனே ஒரு தமிழ்ப் பழமொழியோட ஞாபகம் வந்துருச்சுங்க. அந்தத் தமிழ்ப் பழமொழி எதுன்னு உங்களுக்குத் தெரியுதா?

======================================

ண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிச் சிறுவர்கள் பேருந்தில் கூட்டமாக ஏறினர். ஒவ்வொரு பயணிக்குமாக டிக்கெட் வழங்கிக் கொண்டு வந்த கண்டக்டர் அவர்கள் அருகில் வந்ததும், "என்னப்பா... எல்லாரும் பாஸ் தானா?" என்று கேட்டார். உடன் ஒரு சிறுவன், இன்னொருவனைக் கை காட்டி, "இல்லை ஸார்... இவன் மட்டும் ஃபெயில் ஸார்" என்றுகூற, அனைவரும் சிரித்து விட்டனர். (1980 'அதே' கதிரிலிருந்து)

======================================

3. தங்களின் மகளுக்கு சமீபத்தில் திருமணத்தை முடித்திருந்த அந்தப் பெற்றோர், வீட்டிற்கு வந்த தங்கள் உறவின தம்பதியிடம் கல்யாண போட்டோக்களைக் காட்ட விரும்பி, ஒரு கேள்வி கேட்டனர். அந்தக் கேள்வியைக் காதில் வாங்கியதும் உறவினர்கள் தலையிலடித்துக் கொண்டு, "கர்மம்... கர்மம்...!" என்றபடி இடத்தைக் காலி செய்தனர். அப்படி அவர்கள் கேட்ட கேள்விதான் என்ன?

======================================

"சார்..." என்றார்கள் யாரோ. "யார்?" என்றேன் நான். "பார்..." என்றாள் திவ்யா என் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய் கதவைத் திறந்தேன். வெளியில் நின்றவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஏதோ புதுமையான விதத்தில் உடையும் நகைகளும் அணிந்து நேரே சரித்திரப்பட ஷுட்டிங்கிலிருந்து வந்த ஹீரோயின் போலத் தோற்றமளித்தாள். "யாரும்மா நீ?" என்றேன். "அரிமர்த்தன பாண்டியரின் துணைவி யாம். எமை எதிர்த்த சோழனின் ரத்தத்தைக் குடித்துவிட்டு படுகளத்திலிருந்து வந்திருக்கிறேன் பல்லவ இளவரசே..." என்று பல்லைக்காட்டிச் சிரித்தாள். ஐயோ...! சிரிக்கையில் வாயில் இரண்டு கோரைப் பற்கள் நீண்டிருந்தது தெரிந்தது. அவற்றிலிருந்து ரத்தம் வழிந்தது. அப்போதுதான் அவள் கையைக் கவனித்தேன்... ரத்தம் சொட்டியபடி ஒரு கத்தி! உளறிக் கொட்டி, கிளறி மூடி அலறியடித்து உள்ளே ஓடி, கட்டிலில் கிடந்த திவ்யாவின் அருகில் விழுந்தேன்--- "ஐயோ.. பேய்... பேய்...!". 'பளார்' என்று முதுகில் ஒரு அறை வைத்தாள். "ராஸ்கல்! ராத்திரி பூரா என்னை தேவதைன்னு சொல்லிட்டு, பொழுது விடிஞ்சதும் பேய்ங்கறியா..? கெட் லாஸ்ட்" என்றாள்.

-நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையில் வரும் சில வரிகள் இவை. இதை வைத்து இது க்ரைம் கதையா? சரித்திரக் கதையா, ஆவிக் கதையா, நகைச்சுவைக் கதையா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். சரியான விடை தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால் உங்கள் தலை இஞ்சிநூறாகச் (சுக்குநூறாகத்தான் எப்பவும் சிதறணுமா?) சிதறிவிடும்! ஹா... ஹா...!

======================================

இனி... விடைகள் :

1. நான் கேட்ட கேள்வி: "ஆனந்து, படத்துல நஸ்ரியாவைத்தவிர நம்மளை மாதிரி இளைஞர்களுக்குப் பிடிக்கற விஷயங்கள் என்ன இருக்கு?"

2. அந்தப் பழமொழி: யானைக்கு ஒரு column வந்தா பூனைக்கு ஒரு column வரும்!

3. அந்தப் பெற்றோர் கேட்டது: "எங்க சாந்தி கல்யாண போட்டோ வந்திருக்கு. பாக்கறேளா...?"

Thursday, September 26, 2013

மொறுமொறு மிக்ஸர்-20

Posted by பால கணேஷ் Thursday, September 26, 2013
ன் நண்பனைப் பார்க்க நான் சென்ற சமயம் அவன் வீட்டிலில்லை என்பதால் காத்திருக்¢க நேர்ந்தது. அவன் மனைவி நாலாம் வகுப்புப் படிக்கும் தன் மகளுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள். அங்கேயிருந்த குமுதத்தைக் கையிலெடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த நான் சும்மாயிராமல் அந்தச் சுட்டி ஒன்றிரண்டு முறை அவள் அம்மாவிடம் சந்தேகம் கேட்டபோது நான் முந்திக் கொண்டு பதில் சொன்னேன். "அம்மாவே சொல்லட்டும் அங்க்கிள்" என்றது அது. "சரிம்மா"வென்று புத்தகத்தைப் புரட்டிய நான், அடுத்த சில நிமிடங்களிலேயே அவள் கேட்ட ஏதோ கேள்விக்கு என்னை மறந்து பதிலிறுத்து விட்டேன். சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்த அந்த வாண்டு, "அங்கிளுக்கு எல்லாத்துக்கும் ஆன்ஸர் தெரிஞ்சிருக்கு. ஏன் அங்க்கிள்... 1948ல நம்ம பிரதமரோட பேர் என்ன?"ன்னு கேட்டுச்சு.

"ஹும், ஒரு சிறுகுட்டி நம்மைச் சோதிக்குன்னு" என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு கெத்தாக, "ஜவஹர்லால் நேரும்மா" என்றேன். "தப்புத் தப்பா ஆன்ஸர் சொல்றீங்க..." என்று கை கொட்டிச் சிரித்தது அது. "நான் சரியாத்தாம்மா சொன்னேன்" என்க, அவள் சொன்னாள், "1948லயும் நம்ம பிரதமரோட பேர் மன்மோகன்சிங் தான் அங்க்கிள். அவரு என்ன வருஷத்துக்கு ஒரு பேரா மாத்திக்குவாரு...?" நான் 'ழே'யென்று விழிக்க, நண்பனின் மனைவி வாய்விட்டுச் சிரித்துவிட்டுச் சொன்னாள்: "அண்ணா... இன்னிக்கு வாரமலர்ல இந்தத் துணுக்கு வந்திருக்கு. நான் படிச்சுட்டு சிரிச்சிட்டிருந்தப்ப, இவ என்னன்னு கேட்டா. விளக்கமா சொன்னேன். இப்ப ப்ராக்டிகலா உங்ககிட்ட டெஸ்ட் பண்ணிட்டா..." அவ்வ்வ்வ்! இன்றையக் குழந்தைகள் ரொம்பத்தான் வெவரமப்பா!

================================================

ண்களில் ஏழு என்கிற எண் மனிதர்களோடு விசித்திரத் தொடர்புடைய ஒரு எண்ணாகும். ஏழு பிறப்பு, ஏழு உலகங்கள், ஏழு ராகங்கள் என்று ஏழுக்குப் பின்னாலே உள்ள விஷயங்கள் ஏன் ஏழோடு நின்றுவிட்டன? அது ஏன் எட்டுப் பிறப்பு என்றோ எட்டு உலகங்கள் என்றோ குறிப்பிடப்படுவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் உலகம் என்றால் ஏழு, உருவம் என்றாலும் ஏழு, பிறப்பென்றாலும் ஏழு என்று எழு பிரதானப்படு
த்தப்படுவதன் பின்னாலே சில சித்த சூட்சுமங்கள் உள்ளன.

நம் உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, வெளி, நெருப்பு என்கிற ஐந்துமே நம் உடம்புக்குள்ளேயம் உள்ளது. நம் உடம்பில் மட்டுமல்ல... மிருகங்கள், தாவரங்களிடம் கூட இந்த ஐந்துவிதக் கூறுகள் உண்டு. இந்த ஐந்தும் ஒன்று சேர்ந்து உருவாகின்ற ஒரு விஷயமே நம் உடலாகும். மனிதர்களிடம் மட்டும் இந்த ஐந்து சற்று விரிந்து ஆறு என்ற ஒரு அறிவைப் பெற்று நிமிர்கின்றது. ஆறாகிய அறிவுதான் எண்ணங்களாகிய மனமாக வடிவம் கொள்கிறது. எண்ணங்கள் என்றாலே அது சப்தம்தானே? அதாவது, ஆறாகிய அறிவு ஏழாகிய சப்தமாகிறது. இந்த சப்தம்தான் பாட்டு, பேச்சு, மௌனம் என்று பல வடிவங்களை எடுக்கிறது. மொத்தத்தில் மனிதன் அறியப்படுவது, வளருவது, வாழ்வது என்கிற எல்லாமே அவன் பேசுவதை வைத்துத்தான்.

இதைவைத்தே அவன் அரிய பல உண்மைகளை எட்டுகிறான். ஏழு முதிர்ந்தால் அடுத்தது எட்டு... எட்டி விட்டால் அடுத்துது ஒன்பது! இந்த ஒன்பதுக்கு ஒரு விசி¢த்திரமான தன்மை, இதை எதால் பெருக்கினாலும் இதன் மடங்குகளில் இது மாறவே மாறாது. அவை எல்லாமும் கூட்டுத் தொகை ஒன்பதாகவே முடியும். மாறாத் தன்மை உடையதை நாம் கடவுளாக நினைக்கிறோம். கடவுளே அழியாத, அழிக்க முடியாத சக்தி. ஒன்பதிடமும் அந்தத் தன்மை பொருந்துகிறது. அதனால்தான் ஒன்பது சார்ந்த விஷயங்களை ¨நவ சக்தி¨, ¨நவக்கிரகங்கள்¨, ¨நவநாயக சித்தர்கள்¨ என்கிறோம்.
                                                         -¨சிவரகசியம்¨ நூலில் இந்திரா சௌந்தர்ராஜன்

================================================
 
ரண்டு மாதத்திற்கு முன் என் பழைய கணக்கு என்ற தலைப்பில் என்னுடைய சிறுவயது நினைவுகளை ப்ளாஷ்பேக்கிய போது அதில் நான் முதன் முதலாக வாட்ச் கட்டியது பற்றியும், அது நன்றாகத் தெரிய வேண்டும் என்ற ஆவலில் புகைப்படங்கள் எடுக்கப்படும் போதெல்லாம் மூக்கை (வாட்சை?) நுழைத்ததைப் பற்றியும் சொல்லியிருந்தேன். அந்தப் படங்கள் எதுவும் இல்லையா என்று சில நட்புகள் கேட்டிருந்தனர். சமீபத்தில் சித்தி வீட்டிற்குச் சென்று அந்தப் பழைய படங்களைத் தேடி எடுத்து வந்தேன். அதிலிருந்து இரண்டு படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. கிடைக்கிற கேப்ல முகத்தையும்... முக்கியமா கையையும் நீட்டிட்டிருக்கற அந்தச் சிறுவனாவே நான் இருந்திருக்கலாம்... ஹும்!

================================================

* ஒரு மனிதன் விமானத்தில் சாகசங்கள் செய்வதற்காக மேலே பறந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக தரையில் ஒரு வைக்கோல் போர் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ஒரு கூரிய கடப்பாரை வைக்கோல் போரிலிருந்து வெளியே நீண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் கடப்பாரையில் விழவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவன் வைக்கோல்போர் மேலும் விழவில்லை.

* ஒருமுறை எங்களூர் டூரிங் டாக்கீஸில் 'கந்தன் கருணை' படம் பார்க்க என் பாட்டியையும் அழைத்துப் போயிருந்தேன். முருகனாக நடித்த சிவகுமார் கையில் வேலுடன் தோன்றியதும் பாட்டி எழுந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். பின்னாலிருந்து ஒரு குரல், "பாட்டி... அது முருகன் இல்லை, சிவகுமார்! உக்காரு..." என்றது. அதைத் தொடர்ந்து சிலர் சிரிக்கும் சப்தம் கேட்க, எனக்கு அவமானமாக இருந்தது. பாட்டி குரல் வந்த பக்கம் திரும்பி, "எவன்டா அவன்...? சிவகுமாரன் என்றால் முருகன்தான் என்பது தெரியாதவன்..." என்று சத்தமிட... எல்லாப் பக்கமும் கப்சிப்!

* பாரதிதாசன் 'குயில்' ஏடு நடத்திக் கொண்டிருந்த நேரம். முத்துப்பேட்டையில் ஒரு திருமண விழாவுக்கு வந்திருந்தார். கூட்டத்தினரிடம், "இந்தப் பக்கமெல்லாம் குயில் கிடைக்குதா?" என்று கேட்டார். முதியவர் ஒருவர் சூள் கொட்டிவிட்டுச் சொன்னார்... "எங்கேங்க கிடைக்குது? இந்தப் பக்கம் இருந்த காட்டையெல்லாம் வெட்டிப்புட்டானுங்களே... குயில் எங்கருந்து கெடைக்கும்?" என்று.

-இவை சுட்ட பழங்கள் பழைய 'குமுதம்' இதழ்களிலிருந்து!

================================================

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன?  காத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. 

================================================

To end with a smile :

"அப்பா ... காக்கா கத்துனா சொந்தக்காரங்க‌ வருவாங்காளா?"  "ஆமாம்... மகனே" "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?"  "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."​

Monday, September 23, 2013

சரிதாவும், நம்பியாரும்!

Posted by பால கணேஷ் Monday, September 23, 2013
பொதுவாக சரிதா விருப்பங்கள் அதிகம் இல்லாதவள். ஆனால் சில சமயங்களில் அவளுக்கு ஏற்படும் விருப்பங்கள் விபரீதமாகி, என் பேங்க் பேலன்ஸுக்கு உலை வைப்பது வழக்கம். அப்படி என்னதான்யா அவள் விருப்பப்பட்டு அடம் பிடித்துவிடப் போகிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள்..? சென்ற வாரம் நடந்த (சோகக்)கதையைக் கேளுங்கள்... புரிந்துவிடும்!

‘‘ஹ
ப்பா... என்னா வெயில்... என்னா வெயில்...’’ என்று முனகியபடி ஃபேனைச் சுழலவிட்டு அதன் கீழிருந்த ஃசோபாவில் சரிந்தேன். ‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது. நான் பணிந்தால் எகிறுவதும், எகிறினால் பணிவதும் அவள் வழக்கம் என்பதால் ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள்.

‘‘அடராமா... என்னிக்கு நான் சொல்ற விஷயத்தை நீங்க சரியாப் புரிஞ்சுட்டிருக்கீங்க இப்ப புரியறதுக்கு? ஒரே வெக்கையா இருக்கே... ஒரு ஏ.சி. மெஷின் வாங்கிப் போடுங்கன்னுதானே கேட்டுட்டிருக்கேன். நம்ம அக்கம் பக்கத்து வீட்ல எல்லார்ட்டயும் இருக்கு தெரியுமா? நம்ம வாசனுக்குத் (அவள் தம்பி) தெரிஞ்ச கடை ஒண்ணு இருக்காம். டிஸ்கவுண்ட்ல வாங்கித் தர்றேன்... நமக்கு நாலாயிரம் மிச்சமாகும்ங்கறான்...’’

‘‘வாசனா...?  அவன் எனக்கு நாலாயிரம் மிச்சம் பண்ணினா, அதுக்குப் பின்னால நாப்பதாயிரத்துக்குச் செலவு வெச்சிருப்பானே...’’ என்றேன். ‘‘ஹும்... அவனானா அக்கா, அத்திம்பேர்னு உசிர விடறான். உங்களுக்கானா அவனைக் கண்டாலே இளக்காரம்தான். எங்க வீட்டு மனுஷாளை எப்ப மதிச்சிருக்கீங்க நீங்க...’’ என்று ஆரம்பித்தாள் கடூரமான குரலில். வேறென்ன... ‘‘சரிம்மா... ஆஃபீஸ்ல என்னை வந்து பாக்கச் சொல்லு. செக் தர்றேன். உடனே ஒண்ணு வாங்கிரலாம்’’ என்று (வழக்கம் போல) நான் சொல்வதில் முடிந்தது அது.

‘‘என்னங்க... நானும் வாசனுமாப் போயி ஏ.ஸி. மெஷின் வாங்கிட்டு வந்துட்டோம். அதை ஃபிட் பண்றதுக்கு ஆளுங்களை அனுப்பறேன்னாங்க. கொஞ்சம் பர்மிஷன் போட்டுட்டு உடனே வாங்களேன்...’’ என்று செல்போனில் பேசிய சரிதாவின் குரலில்தான் எத்தனை இனிமை! உடனே கிளம்பி வந்த எனக்கு, என் வீட்டில்தான் நுழைகிறேனா என்று சந்தேகமே வந்துவிட்டது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் வரவழைத்து தான் ஏ.ஸி. மெஷின் வாங்கிவிட்ட பிரபாவத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். ஏதோ பெண் பார்க்க வந்தவர்கள் மாதிரி அவர்களுக்கு பக்கோடா, (நெய் மணக்க) கேசரி என்று உபசாரம் வேறு. சரிதான்... இந்த யானையை வாங்கியதால் இன்னும் எத்தனை அங்குசங்களுக்குச் செலவு பண்ணப் போகிறேனோ என்று (அவற்றைச் சாப்பிடாமலேயே) எனக்கு வயிற்றைக் கலக்கியது.

ஏ.ஸி. மெஷின் பொருத்தித் தருவதற்காக இரண்டு மெக்கானிக்குகள் வந்தனர். ஹாலில் எங்கே மாட்ட வேண்டுமென்று சரிதா சொல்ல, வேலை செய்து கொண்டிருந்த அவர்களிடம் ஏ.ஸி. மெஷின் என்ன லெவல் கூலிங்கில் வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்துத்தானா சரிதா அக்கம்பக்கத்தினரை அனுப்பிவிட்டு உள்நுழைய வேண்டும்? ‘‘டேய் வாசா... இவங்க கிட்ட ஏ.ஸி. மெஷின் பத்தின எல்லா விஷயத்தையும் நல்லாக் கேட்டுக்கோடா... உங்கத்திம்பேருக்கு அவ்வளவு சமத்து(?) பத்தாது’’ என்று உரக்க அவள் சொல்ல, அந்த ஏ.ஸி. மெக்கானிக் என்னை காக்காய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போலப் பார்த்தான். அவ்வ்வ்வ்வ்! என்று புலம்பியபடி இடத்தைக் காலி செய்தேன்.

சற்று நேரத்தில் அவர்கள் சென்றதும், என்னமோ காஃன்பரன்ஸில் நலத்திட்டங்களை திறக்கும் முதல்வர் போல வாசன் பெருமையாய் ரிமோட்டைக் கையில் ஏந்தி ஏ.ஸி.யை ஆன் செய்ய, சரிதா கைதட்டினாள். அப்போது வாசனின் செல்ஃபோன் ‘‘ஊதா கலரு ரிப்பன்’’ என்று உரக்க அலறியது. ‘‘டேய், அவருக்கு இப்படி கண்ட பாட்டையும் ரிங்டோனா கத்தவிடறது பிடிக்காதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வீட்ல வந்தா செல்லை ‘மன்மோகன்’ மோடில போட்டுத் தொலையேண்டா’’ என்று சரிதா (அவனையும்) திட்ட, அவன் தன் அப்பா அம்மாவிடம் ஏ.ஸி. வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அப்புறமென்ன...

வேறொரு வேலையாக வெளியில் சென்ற நான் இரவு வீடு திரும்பியபோது ஏ.ஸி. மெஷினிலிருந்து இரண்டு ரம்பங்கள் உரசிக் கொள்கிற தினுசில் ‘கொர்’ என்று பெருத்த சப்தம் வந்து கொண்டிருக்க... மிஷினுக்குக் கீழே வெள்ளையாய் ஒரு மூட்டை தெரிந்தது. ‘‘சரிதாம்­மா... ஏ.ஸி. மெஷினுக்கு என்னமோ ஆய்டுச்சு. வினோதமா சத்தம் போடுது பாரு’’ என்று பயந்து சத்தமிட்டபடி அருகில் சென்று பார்த்தால்... அடக்கடவுளே... மரவட்டை போல உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்திருந்த சரிதாவின் அப்பாவின் வெள்ளை பனியன், வேஷ்டிதான் எனக்கு மூட்டை மாதிரி தெரிந்திருக்கிறது. அந்த ரம்ப சத்தம் அவரிடமிருந்தல்லவா வந்து கொண்டிருக்கிறது! இலவச இணைப்பாக என் மாமியாரின் குரலும் சமையலறையிலிருந்து என்னை வரவேற்றது!

அன்னிக்கு ஆரம்பிச்சதுங்க... அடு¢த்து வந்த வாரம் முழுக்க தான் ஏ.ஸி. வாங்கி விட்ட பெருமை(!)யை விதவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் சரிதா. உதாரணத்துக்கு... செல்லில் வந்த காலை அட்டெண்ட் பண்ணினால், ‘‘அதுவாடி... புதுசா ஏ.ஸி. போட்ருக்கோம்ல. அதனால ரிங் அடிச்ச சத்தமே காதுல விழல...’’ என்று ஆரம்பிப்பதும், இவளாகவே கால் செய்து ‘‘இப்பல்லாம் ஏ.ஸி.யிலயே புழங்கிட்டு, நான் ஏ.ஸி.யில சினிமா பாக்கக் கூட முடிய மாட்டேங்கறது’’ என்று செல் பேச்சை முடிப்பதும் ஆக, சரிதா டமாரம் பலமாக இரைய ஆரம்பித்தது-... ‘இவளுக்கு ஏன்டா செல்ஃபோன் வாங்கித் தந்தோம்’ என்று நான் சலித்துக் கொள்ளுமளவுக்கு. (செல்போன் வாங்கிப் பட்ட அவஸ்தை தனிக்கதை).

‘‘ஏங்க... ஏ.ஸி. ரூம்ல இவ்ளோ பெரிய பீரோ இருந்தா இடைஞ்சலா இருக்கு. ரூம் நல்லாக் கூல் ஆக மாட்டேங்கறது. இதை நகத்தி முன் ரூம்ல போடுங்க...’’ என்று ஆரம்பித்து அடுத்த ஒரு வாரம் என்னை முதுகு அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். போல வளைந்து போகுமளவுக்கு வீட்டை ரீஅரேன்ஜ் பண்ணுகிறேன் பேர்வழியென்று ‘ட்ரில்’ வாங்கினாள். அவளுக்கு ஏ.ஸி. மெஷின் கூலாக இருக்க, எனக்குள்ளே எழுந்த உஷ்ணத்தில் அது ‘எம்.என்.நம்பியார்’ மாதிரி தெரிய ஆரம்பித்தது எனக்கு.

அந்த மாதக் கடைசியில் கணக்கு வழக்குப் பார்த்தபோது கன்ஃபர்ம்டாகத் தெரிந்து போனது அது நம்பியார்தானென்று! சரிதா செல்போனில் அனைவரிடமும் தன் ஏ.ஸி. பெருமை(!)  பேசியதில் செல்ஃபோன் பில் இரண்டு மடங்காகி விட்டிருந்தது. ஏ.ஸி.யை தரிசிக்க(?) வந்த அவள் தோழிகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் எல்லாருக்கும் தாராளமாக டிபன், ஸ்வீட் செய்து வழங்கியதில் மளிகை பில் இரண்டு மடங்காகி, என்னை விழி பிதுங்க விட்டிருந்தது. அவள் குடும்பம் இடத்தை அடைத்துக் கொண்டதே என்று ஏ.ஸி. ஹாலை அவர்களுக்கு வழங்கிவிட்டு, நான் முன் ரூமில் ஃபேனில் படுத்துக் கொண்டது தப்பாயிற்று. ÔÔஏ.ஸி. ரூம்ல இருக்கறச்ச யாராவது கதவு தட்டினாலும் கேக்கறதில்ல. காலம்பற பால்காரன் பால் போடறதுகூடத் தெரிய மாட்டேங்கறது. நீங்க முன் ரூம்லயே இருந்தா இதெல்லாம் கரெக்டாப் பாத்துக்கறீங்க... இதையே மெயின்டைன் பண்ணுங்களேன்ÕÕ என்று கூலாக அவள் உத்தரவிட... அவ்வ்வ்வ்வ! ஏ.ஸி. எனக்கு எட்டாக்கனி ஐயா...!

இப்போது புரிகிறதா உங்களுக்கு... சரிதா புதிதாய் எதன் மேலாவது ஆசை வைத்தால் நான் ஏன் அலறுகிறேன் என்பது...! அதுசரி... உங்கள் வீட்டில் ‘நம்பியார்’ உண்டா? உங்க அனுபவங்களையும் சொல்லுங்களேன், ப்ளீஸ்...!

Wednesday, September 18, 2013

­மீண்­டு ­வந்­த ­மின்­னல்!

Posted by பால கணேஷ் Wednesday, September 18, 2013
­ஹாய் ­எவ்­ரி­ப­டி... உங்­க­ளை­ல்­லாம் ­பாத்­து ­­ரொம்­ப ­நா­ளாச்­சு. எல்­லா­ரும் ­நலந்­தா­னே...!

எஞ்­சோ­கக் ­க­தை­யக் ­கே­ளு ­தாய்க்­கு­ல­மே... அ­தக் ­­கேட்­டாக்­கத் ­தாங்­கா­தம்­மா ­உங்­க ­ம­ன­மே... இன்­டர்­நெட்­டு ­ஒண்­ணை ­நம்­பி ­எங்­க­டை­யத் ­தொ­றந்­து ­வெச்சேன்... போஸ்ட்­டு ­மே­ல ­போஸ்ட்டாப் ­போட்­டு ­உங்­க­ளை­யும் ­அ­றுத்­து ­வந்­தேன்... எஞ்­சோ­கக் ­க­தை­யக் ­கே­ளு ­தாய்க்­கு­ல­மே...

­அப்­ப­டின்­னு ­ஆ­ரம்­பிச்­சு ­ஒ­ரு ­மா­ச­மா ­ஆ­பீஸ்­ல­யும், வீட்­ல­யும், நெட் ­கி­டைக்­கா­ம­யும் ­பட்­ட ­பாட்­டைல்­லாம் ­சொல்­லிக் ­கைப்­புள்­ள ஸ்­­டைல்­ல ­அ­ழ­ணும் ­நா­­னு ­நி­யா­ய­மா. ஆ­னா ­சோ­கக் ­க­தை­யி­ல­யும் ­கூ­ட ­ஹாஸ்­யத்­தை ­எ­திர்­பார்ர்க்­க­ற ­டைப்­பாச்­சு­தே ­நா­ம... அ­த­னா­ல ­அ­தை­யெல்­லாம் ­விட்­டுட்­டு ஸ்ட்­ரெ­யிட்­டா ­மேட்­ட­ருக்­குள்­ள ­வ­ர­லாம். க­டல்­ல ­வி­ழ­ற ­ம­ழைத்­து­ளி­ல ­ஒண்­ணு ­எங்­க ­போ­கு­துன்­னு ­யா­ரு ­தே­டப் ­போ­றாங்­கன்­னு ­எ­னக்­குள்­ள ­ஒ­ரு ­நெ­னப்­பு ­இ­ருந்­திச்­சு. ­ப­ல ­பெ­ரி­ய ­அ­லை­க­ளும், சி­ல ­சி­றி­ய ­அ­லை­க­ளும் ­இந்­த ­ம­ழைத்­து­ளி­யக் ­கா­ணா­ம ­‌­தே­டிப்­ ­பு­டிச்­சு ­வி­சா­ரிச்­சப்­பத்த்­தான் ­என் ­எண்­ணம் ­த­வ­றா­ன­துன்­னு ­பு­ரிஞ்­சிச்­சு. இ­ணை­யத்­து­ல ­நு­ழைஞ்­ச­து­ல ­நா­ம­ளும் ­நி­றை­ய ­ம­­னு­ஷங்­க­ளைச் ­சம்­பா­திச்­சி­ருக்­கோம்­னு ­அ­ள­வில்­லா­த ­சந்­தோ­ஷ­மும் ­எ­ழுந்­துச்­சு.

­அ­து­ல­யும் ­இந்­த ­ஸ்.பை. ஒ­ரு­ப­டி ­மே­ல ­போ­யி... ‘கா­ணா­மல் ­போ­ன ­ப­தி­வர்’ன்னு ­நம்­ம­ளைப் ­பத்­தி ­ஒ­ரு ­ப­தி­வே ­எ­ழு­தி­ன­தப் ­பாத்­த­தும் ­ம­ன­சுக்­குள்­ள ­­‘டர்ர்’­ரா­யி­­ரு­ச்­சு. இ­னி­யும் ­நா­ம ­க­வ­னிக்­கா­ம ­வுட்­டா...கோ­வை ­ஆ­வி, சீ­னு, அ­ர­சன், ரூபக்-­னு ­நம்­ம ­சங்­கத்­து ­உ­றுப்­பி­னர்­கல்­லாம் ­சேர்ந்­து ­பு­து­சா ­வந்ந்­தி­ருக்­க­ற ­இந்து ­பேப்­பர்­ல ­கூ­ட ­வி­ளம்­ப­ரம் ­கு­டுத்­து­டு­வாங்­க­ளோன்­னு ­தோ­ணிச்­சு. (எல்லா ­பய­புள்ள்­­ளைங்­க ­கிட்­ட­யும் ­நம்­ம ­போட்­டோ ­வே­ற ­இ­ருக்­கு­து!) ச­ரி... நாம­ளும் ­ஏதாச்­சும் ப­ழை­ய­ப­டி ­கி­றுக்­க­லா­மேன்­னு ­ரீ ­எண்ட்­ரி ­இப்­ப!

‘கா­ணா­மப் ­போ­ன­’ அப்­ப­டின்­னு ­ப­டிச்­ச­து­மே ­எ­ழுத்­தா­ளர் ­சா­வி ­எ­ழு­தி­ன ­அ­வ­ரோ­ட ­சின்­ன ­வ­ய­சு ­அ­னு­ப­வம் ­ஒண்­ணு ­ப­டிச்­ச­து ­நி­னை­வுக்­கு ­வந்­த­து. ­­எட்­டு ­வ­குப்­பு ­வ­ரை ­த­மி­ழில் ­ப­டித்­த ­அ­வ­ரை ஒன்­ப­தாம் ­வ­குப்­பில் ­இங்­கி­லீஷ் ­மீ­டி­யத்­துக்­கு ­மாற்­றி­ன­தா­ல ­­ப­டிக்­க­ற­து ­கஷ்­ட­மா ­இ­ருக்­க, எக்­ஸாம் ­எ­ழு­தி­னா ­பெ­யி­லா­யி­டு­வோ­மோன்­னு ­ப­யந்­து, அ­வங்­கப்­பா ­எக்ஸாம் ­பீஸ் ­கட்­டக் ­கு­டுத்­த ­ப­ணத்­தை ­எடுத்­து­க்­கிட்­டு ­ஊ­ரை ­விட்­டு ­ஓ­டிட்ட்­டா­ரு.கை­ல ­இ­ருந்­த ­கா­செல்­லாம் ­தீர்­ற ­நிலை­யி­ல ­தி­ருப்­பா­தி­ரி­பு­லி­யூர்­ல ­ப­டிச்­சுட்­டி­ருந்­த ­அ­வ­ரோ­ட ­அத்­தை ­ம­க­னைத் ­தே­டிப் ­போ­யி­ருக்க்­கா­ரு.அ­வன் ­லீ­வு­ல ­சொந்­த ­ஊ­ருக்­குப் ­போ­யிட்­ட­தா­ல, ­கைல­ருந்­த ­கா­சும் ­தீர்ந்­து ­போ­க ­ரெண்­­டு ­நாள் ­கொ­லப்­பட்­டி­னி­யா பா­ட­சா­லைத் ­திண்­ணை­யி­ல ­கெ­டந்­த­வ­ரு, ஒ­ரு ­ஓட்­டல்­கா­ர­ரை ­சி­னே­கம் ­பண்­ணிக்­கிட்­டு ­அவ­ர் ­உ­த­வி­யா­ல ­ஊ­ருக்­கு ­லெட்­டர் ­எ­ழு­திப் ­போட்­ருக்­காரு. ஊர்­ல ­இ­வ­ரக் ­காணா­ம ­த­விச்­சு ­இ­வங்­கப்­பா ­அம்­மா ­கோ­யில் ­கோ­யி­லா ­வேண்­டிட்­டி­ருக்­காங்க. லெட்­ட­ரைப் ­பாத்­த­தும் ­அப்பா ­வந்­து ­­சா­வி­யை ­ம­யி­லாப்­பூ­ருக்­கு ­கூட்டிட்­டுப் ­போ­யிட்ட்­டா­ரு. அங்­க ­அ­வ­ரு ­வேண்­டிக்­கிட்­ட ­மா­தி­ரி ­பி­ரா­ம­ணர்­க­ளுக்­கு ­­முந்­தி­ரிப்­ப­ருப்­பு, பா­ய­சம் ­எல்­லாம் ­வெச்­சு ­அட்­ட­கா­ச­மா ­ஒ­ரு ­வி­ருந்­து ­போட்­ருக்­கா­ரு ­அ­­வ­ரோ­ட ­அப்­பா. வி­ருந்­து­ல ­சாப்­பிட்­டுட்­டு ­பெ­ரி­சா ­ஏப்­பம் ­விட்ட­ ப­டி ­வந்­த ­ஒ­ருத்­த­ரு, ‘‘சாப்­பா­டு ­பி­ர­மா­தம்­­டா... ம­க­ரா­ஜ­னா ­நீ ­அ­டிக்­க­டி ­இப்­ப­டி­க் ­கா­ணா­ம ­போ­யிண்­டி­ரு... எங்­க­ளுக்­கு ­அப்­ப­தான் நல்­ல ­சாப்ப்­பா­டு ­கெ­டைக்­கும்’’ ­அப்­ப­டின்­னா­ராம்...! ஹா... ஹா...! அ­து­மா­தி­ரி ­நான் ­கா­ணா­மப் ­போயி ­தி­ரும்­ப ­வந்­த­துக்­கு ­நம்­ம ஸ்.பை. ச­ர­வ­ணன் ­உங்­க ­எல்­லா­ருக்­கும் ­விருந்­து ­வெக்­காட்­டி­யும் ­அட்­லீஸ்ட் ­எ­னக்­கு ­மட்­டு­மா­வ­து ­மெ­கா ­வி­ருந்­து ­ஒண்­ணு ­வெப்ப்­பா­ருன்­னு ­நெ­னக்­கி­றேன். ஹி... ஹி...!

­நம்­ம ஸ்.பை. தன் ­ப­தி­வு­ல ­எ­ழு­தி­யி­ருந்­த ­ஒ­ரு ­வ­ரி ­எ­னக்­கு ­ரொம்­பப் ­பு­டிச்­ச­து. நான் ­மீண்­டும் ­வ­லைக்­குள்­ள ­வந்­த­தும் ­நண்­பர்­கள் ­அ­னை­வ­ரோ­ட ­ப­தி‌­வு­க­ளை­யும் ­சேத்­து­வெச்­சுப் ­ப­டிச்­சு ­க­ருத்­துப் ­போ­டு­வேன்­னு ­சொல்­லி­யி­ருந்ந்­தா­ரு. அ­து ­ரொம்­பக் ­க­ரெக்ட். ­மத்­த­வங்­க­ளுக்­கு ­க­ருத்­து ­போ­ட­ற­துக்க்­கா­க­வே ­எ­னக்­குன்­னு ­ஒ­ரு ப்­ளாக் ­ஆ­ரம்­பிச்­ச­வன் ­நா­னுங்­க­ற­தா­ல ­அம்­ம ­ப­ய ­நல்­லாப் ­பு­ரிஞ்­சு ­வெச்­சு­ருக்கா­னேன்­னு ­ம­கிழ்­வா ­இ­ருந்ந்­திச்­சு. நா­ளை­ல­ருந்­து ­அ­தைச் ­செய்­ய­ற­து­தான் ­­என்­னோ­ட ­த­லை­யா­ய (­கண்­ணா­ய, கை­யா­ய) ­ப­ணி­ங்­கோ...! ­

****************************************************

அ­வர் ­என் ­நெ­ருங்­கி­ய ­நண்­பர். ‘பூக்­­கூ­டை’ என்­ற ­த­ளத்­தில் ­தன் ­சிந்­த­னை ­ம­லர்­க­ளை ­நி­ரப்­பிட்டி­ருந்தா­ரு. ­(யா­ரெல்ல்­லாம் ‘பூக்க்­கூ­டை’க்­கு ­வி­சிட் ­அ­டிச்சி­ருக்கீங்­க? கை ­தூக்­குங்­க..) ஆ­ரோக்கி­ய­தா­ஸ் ­என்­ப­து ­அ­வர் ­பெ­யர். அ­நி­யா­யத்­துக்­கு ­நல்­ல­வர். ­செப்­டம்­பர் 9ம் ­தே­தி ­செல்­வி. ஜெ­சிந்­தா ­மே­ரி ­கிட்­ட ­வ­ச­மா ­மாட்­டிக்­கிட்­டா­ரு. ­சீ­ரி­யஸ் ­டைப்­பா­ன ­அ­வ­ரை ­கல்­யா­ணத்­­தன்­னிக்­கா­வ­து ­‘சி­ரி’­யஸ் போஸ்­ல ­­போட்­டோ ­எ­டுக்­க­லாம்­னு ­ரொம்­­ப ட்­ரை பண்­ணேன்... க­டை­சி­ல ‘நான் ­அ­லு­து­டு­வேன்’னு ­மி­ரட்ட்­டி­ன­தும் ­கொஞ்­ச­மா ­சி­ரிப்­­பை(?)ச் ­சிந்­த­றா­ரு ­பாரு்ங்­கோ...!



****************************************************

இப்­ப ­நம்­­­மோ­ட... ஐ ­மீன் ­என்­னோ­ட... ச­மீ­பத்த்­தி­ய ­கோ­வை ட்­ரிப்­பு­ல ­எ­டுத்­த ­சி­ல ­­ப­டங்­கள் ­உங்­க ­பார்­வைக்­கு...


  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube